இலங்கை

சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

Published

on

சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

கடந்த 25 நாட்களில் கட்டுநாயக்க நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (26.01.2024) காலை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சாரதியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் விபத்தில் உயிரிழந்ததன் மூலம் இந்த விடயம் தெரியந்துள்ளது.

கொழும்பில் இருந்து கட்டுநாயக்க வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

எனினும் போதைக்கு அடிமையானவர்கள் நிலத்தடி மின் கம்பிகளை அறுத்துள்ளமையினால் தற்போது வீதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திருட்டுகளை தடுக்க அதிகாரிகள் முயற்சித்த போதிலும், தற்போது நடந்து வரும் இந்த செயலால் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.

அதற்கமைய, இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளின் உயிரிழப்புக்குக் காரணம் மிகவும் இருண்ட தன்மையா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version