அரசியல்

சிங்கள தலைமைகளின் சதி: நாடாளுமன்றில் சிறீதரன்

Published

on

சிங்கள தலைமைகளின் சதி: நாடாளுமன்றில் சிறீதரன்

இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள தமிழ் – சிங்கள முரண்பாடுகளுக்கு கௌரவமான முறையில் தீர்வு காண்பதற்கு  சிங்கள தலைவர்கள் தவறியிருக்கின்றார்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

எமக்குத் தீர்வு வழங்க வேண்டிய பல சந்தர்ப்பங்களில்  இந்த அரசாங்கத்தின் தலைமைகள் தட்டிக்கழித்திருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பது இந்த நாட்டிலே இருக்கின்ற அடக்குமுறைகளுக்குள் இதுவும் ஒரு வித்தியாசமான அடக்குமுறையாக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியிருக்கின்றது.

இங்கே நான் புத்த பகவானின் ஒரு வாக்கியத்தை பதிவு செய்ய விரும்புகின்றேன். “நமக்கு முடிவு உள்ளது என்பதை இங்கு சிலர் அறிவதில்லை”. இது புத்த பகவான் தன்னுடைய மகுட வாக்கியங்களாக சொன்னவற்றில் ஒன்று.

நாங்கள் பல பேர் அவ்வாறு தான் இந்த பூமியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமக்கு ஒரு முடிவு இருக்கின்றது இந்த பூமியிலே. நாம் செய்கின்றதெல்லாம் சரியா தவறா என்பதை புரிந்து கொள்ள முடியாமல் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.

Exit mobile version