இலங்கை

நிலக்கடலை இறக்குமதி தொடர்பில் பணிப்புரை

Published

on

நிலக்கடலை இறக்குமதி தொடர்பில் பணிப்புரை

நிலக்கடலை அறுவடை சந்தைக்கு வெளியிடப்படுவதற்கு முன்னர் 2000 மெற்றிக் தொன் நிலக்கடலையை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி அனுப்பியுள்ள கடிதத்தின் பிரகாரம் 2000 மெற்றிக் தொன் நிலக்கடலை கையிருப்பு பெப்ரவரி மாத நடுப்பகுதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022/23 உயர் பருவம் மற்றும் 2023 இளவேனிற் பருவத்தில் நிலக்கடலை அறுவடை போதுமானதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய நீர் வசதிகள் இன்மை மற்றும் உரங்கள் பயன்படுத்தப்படாமை காரணமாக 50 முதல் 55 சதவீதம் வளர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சின் செயலாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உடனடியாக 2000 மெற்றிக் தொன் நிலக்கடலையை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலக்கடலைக்கு மேலதிகமாக 1000 மெற்றிக் தொன் உழுந்து மாவையும் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சின் செயலாளர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளார்.

Exit mobile version