இலங்கை

வரலாறு காணாத வகையில் உயர்ந்த கரட்டின் விலை

Published

on

வரலாறு காணாத வகையில் உயர்ந்த கரட்டின் விலை

நாட்டில் வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த கரட்டின் விலை இன்று சடுதியாக குறைவடைந்துள்ளது.

அண்மைய நாட்களில் 2,000 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட கரட் ஒரு கிலோகிராம் தற்போது சந்தையில் 700 ரூபாய் முதல் 800 ரூபாவிற்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, பேலியகொடை மெனிங் சந்தையில் கரட் ஒரு கிலோகிராம் ஒன்றின் சில்லறை விலை இன்றைய தினம் 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரையில் பதிவாகியிருந்தது.

அத்துடன், போஞ்சி ஒரு கிலோகிராம், 650 ரூபாவுக்கும், கோவா கிலோகிராம் ஒன்று 500 ரூபாவுக்கும் லீக்ஸ் ஒரு கிலோகிராம் 350 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒரு கிலோகிராம் தக்காளி 450 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 850 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 350 ரூபா முதல் 450 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மெனிங் சந்தை, கெப்பட்டிபொல விசேட பொருளாதார நிலையம், புறக்கோட்டை பொருளாதார மத்திய நிலையம், தம்புள்ளை, நாரஹேன்பிட்டி, நுவரெலியா, உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்களிலும் மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version