இலங்கை

அனுரகுமாரவை சாடும் தென்னிலங்கை அரசியல்வாதி

Published

on

அனுரகுமாரவை சாடும் தென்னிலங்கை அரசியல்வாதி

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார முட்டாள்தனமான காரணங்களை கூறி வருவதாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

விவாதமொன்றுக்கு வருமாறு விடுத்த பகிரங்க அழைப்பினை அனுர நிராகரித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தைரியமும் நம்பிக்கையும் இருந்தால் முட்டாள்தனமான கதைகளை பேசாது விவாதத்திற்கு வர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கத்தைக் கொண்ட ஒரே கட்சி தமது கட்சி என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் வேறு எந்தவொரு தரப்பிற்கும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள பௌத்த தேசிய வாதத்தை ஏற்றுக்கொள்வதாக திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் நலின்த சில்வாவின் ஆக்கங்கள் தம்மை அதிகளவில் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பலர் இந்த ஆக்கங்களை பிழையாக புரிந்து கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version