இலங்கை

இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Published

on

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அல்லது இணைப்புகள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை மக்களை கோரியுள்ளது.

இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டில் சட்டவிரோத மின்வேலிகள் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பல்வேறு மனித நடவடிக்கைகளால் 2023 ஆம் ஆண்டில் 474 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சுமார் 6,000 காட்டு யானைகள் வசித்து வரும் நிலையில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்டவிரோத செயல்களை தடுக்க அனுமதியின்றி மின்சாரம் வழங்கப்படுவது தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை மக்களை கோரியுள்ளது.

Exit mobile version