இலங்கை

யாழில் நோயாளர் காவு வண்டியில் சென்று உயர்தர பரீட்சை எழுதிய மாணவி

Published

on

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவி ஒருவர் அவசர நோயாளர் காவு வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு பரீட்சையில் தோற்றியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி இன்றையதினம் பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தது.

எனினும் உடல்நிலையில் முன்னேற்ற மேற்படாத காரணத்தினால் மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மருத்துவமனை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவி குறுகிய நேரவிடுப்பு அடிப்படையில் மருத்துவமனையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலமாக பரீட்சை நிலையத்துக்கு காலை அழைத்து செல்லப்பட்டு மருத்துவ தாதியின் கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Exit mobile version