இலங்கை

நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டம்

Published

on

நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் பெறுமதி சேர் வரி 18 வீதமாக உயர்த்தப்பட்டமைக்கு எதிராக இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

நாடு தழுவிய ரீதியில் மக்களை அணி திரட்டி தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டமை மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த போராட்டத்தின் முதல் கட்டமாக எதிர்வரும் 30 ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பொது மக்கள், சிவில் அமைப்புக்களும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Exit mobile version