இலங்கை

மூடநம்பிக்கைகளினால் நாட்டு மக்களுக்கு ஆபத்து

Published

on

நாட்டில் நிலவி வரும் மூட நம்பிக்கைகளினால் நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூட நம்பிக்கைகளின் காரணமாக 7500 குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத காரணத்தினால் நாட்டில் 22 மில்லியன் சனத்தொகைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி ஏற்றிக் கொள்ளத்தேவையில்லை என சமூகத்தில் மூட நம்பிக்கை நிலவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தட்டம்மை மீண்டும் தலைதூக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தட்டம்மை நோய்த்தொற்று தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத சுமார் 7500 குழந்தைகள் இருப்பதாக தொற்று நோய் விஞ்ஞான ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

தங்களது பிள்ளைகள் தட்டம்மை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் வயதுடையவர்கள் என்றால் உடனடியாக மாகாண தடுப்பூசி ஏற்றும் நிலைகளுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

Exit mobile version