இலங்கை
காசாவில் பசியால் அவதியுறும் சிறுவர்கள்
காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பசி மற்றும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிதியத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, காசா பகுதியில் 2 வயதுக்குட்பட்ட 90% குழந்தைகளுக்கு சரியான ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த போதுமான உணவு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இடம்பெற்றுவரும் யுத்த மோதல்களினால் அப்பகுதி சிறுவர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல் மற்றும் மோதல் காரணமாக காசா பகுதியில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி தடைபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
காசாவில் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்றுவரும் போரில் தற்போதைய நிலவரப்படி இறந்தவர்களில் 5,300 பெண்களும் 9,000 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.