இலங்கை

கொழும்பு, யாழ்ப்பாணத்தில் தீவிரமடையும் டெங்கு

Published

on

நாடாளவிய ரீதியில் டெங்கும் பரவும் அபாயம் உள்ள இடங்களை இனங்கண்டு அதனை சுத்தம் செய்யும் நடவடிக்கையை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

சுத்தம் செய்யப்படும் பகுதிகள், வீடுகள், தொழில் நிறுவனங்களுக்கு சொந்தமான உரிமையாளர்களிடம் அதற்கான பணத்தை அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநி்லை காரணமாக டெங்கு தொற்று வேகம் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அந்த எண்ணிக்கை 1871 ஆகும்.

நேற்று மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 384 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 351 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 203 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள டெங்கு விரைவு மருத்துவ பிரிவுகளின் எண்ணிக்கை 71 என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version