இலங்கை

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

Published

on

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காகவே குறித்த குழுவானது அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைக்கு முன்னர், இலங்கை அரசாங்கம் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மீளாய்வு நடவடிக்கை இந்த வருடம் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இடம்பெறும்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற விவாதத்தில், இலங்கையின் பொருளாதாரமானது ஒரு ஸ்திரநிலையை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள செலவுகள் மற்றும் வரி வருமானம் போன்றவற்றை தவிர சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்ட ஏனைய இலக்குகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version