இலங்கை
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள்
மத்திய தபால் பரிவர்த்தனை ஊடாக பல்வேறு நபர்களினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் தொகுதி சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவில் இருந்து மத்திய தபால் பரிவர்த்தனைக்கு அனுப்பப்பட்ட 11 பொதிகளில் சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் இருந்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
அந்த பொதிகளில் எக்ஸ்டசி, மெத்தாம்பெட்டமைன், 318 கிராம் குஷ் மற்றும் 15 கஞ்சா விதைகள் அடங்கிய 1,055 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.