இலங்கை

கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா..!

Published

on

நாட்டில் கோவிட் 19 தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக சமூகத்தில் பேசப்படும் விடயத்தில் உண்மையில்லை என மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பக்க விளைவுகள் மற்றும் நோய்கள் தொடர்பில் வெளியிடப்படும் தகவல்களில் விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அம்மை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத குழந்தைகளுக்கு நோய்த் தாக்கம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் அம்மை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களே அதிகளவில் நோய்த் தொற்றுக்கு இலக்காகின்றனர் என நிபுணத்துவ மருத்துவர் சமீத கினிகே தெரிவித்துள்ளார்.

குறித்த வயதெல்லையை கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version