இலங்கை
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க சட்டமூல விவாதம் தொடர்பில் தீர்மானம்
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க சட்டமூலம் தொடர்பான விவாதத்தை அடுத்த வாரம் நடாத்துவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி முற்பகல் 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான இரண்டாம் வாசிப்பு உட்பட யோசனைகளும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.