இலங்கை

வெள்ளவத்தை தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை

Published

on

வெள்ளவத்தையில் உள்ள தொலைபேசி நிலையமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து கொள்ளையில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய இலங்கை கடற்படை அதிகாரிகள் நால்வர் இன்று அதிகாலை வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பத்தேகம, பொரலஸ்கமுவ, கொடகவெல, பிபில பகுதிகளைச் சேர்ந்த 37 தொடக்கம் 38 வயத்திற்குட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டாளர் வெள்ளவத்தை பிரதேசத்தில் இரவு பகலாக இயங்கும் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

நேற்று இரவு இனந்தெரியாத நால்வர் வந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் அடையாள அட்டையை காட்டி நிறுவனத்தை பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கமைய, நிலையத்தை திறக்குமாறு ஊழியர்களை திறக்குமாறு கூறியுள்ளனர்.

கதவைத் திறந்து கொண்டு நிறுவனத்திற்குள் நுழைந்த அவர்கள் திடீரென ஊழியர்களுக்கு கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததுடன் 670,000 ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

Exit mobile version