இலங்கை
சந்திரசேன எம்.பி மற்றும் ரஞ்சித் சமரகோனிற்கு எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் ஆகியோருக்கு கிராம மக்கள் பாரிய எதிர்ப்பை காட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது.
அநுராதபுரம் – தம்புத்தேகம கொன்வெவ பிரதேசத்தில் உள்ள கிராம மக்களே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றின் பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தம்புத்தேகம, கொன்வெவ கிராமத்துக்கு சென்றிருந்தபோது அங்கு ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இதன்போது அரசாங்கத்தினால் வழங்கப்படும் நீர் வடிகால்களை அமைப்பதற்காக, தனிப்பட்ட சொத்துக்களை பயன்படுத்தினார்களா என இரண்டு அரசியல்வாதிகளிடமும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இரண்டு அரசியல்வாதிகளும் தாமதமாகவே அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.