இலங்கை

இலங்கையின் பொருளாதாரப் பாதைக்கு சர்வதேச பொருளாதார நிபுணர் ஒருவர் மதிப்பீடு

Published

on

இலங்கையின் பொருளாதாரப் பாதைக்கு கலவையான மதிப்பீடு ஒன்றை பொருளாதார நிபுணரான ருசிர் சர்மா வழங்கியுள்ளார்.

நிதி ஒழுக்கம் மற்றும் பணவீக்கக் கட்டுப்பாட்டை நோக்கிய பாராட்டுக்குரிய நடவடிக்கைகளை ஒப்புக்கொண்ட சர்மா, கடன் குவிப்பு மற்றும் வரி வருவாய் உருவாக்கம் தொடர்பான தொடர்ச்சியான கவலைகளையும் எடுத்துரைத்துள்ளார்.

பெரும்பாலான நாடுகள், நெருக்கடிகளின் போது மட்டுமே நிதி ஒழுக்கத்தை மேற்கொள்கின்றன. எனினும் ஸ்திரத்தன்மையின் காலங்களில் செயற்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் மேலும் நிலையான விளைவுகளை அளிக்கின்றன என்று அவர் வாதிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜனநாயக நாடுகளின் “வளர்ச்சி மற்றும் பேரழிவு” தலைவர்களின் விருப்பங்களைப் பொறுத்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்தகால பணவீக்க விடயங்களில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. எனினும் கடந்த ஐந்தாண்டுகளில் இலங்கையின் அரசக் கடனில் சமீபத்திய அதிகரிப்பு குறித்து மிகுந்த கவனம் தேவை என்று சர்மா எச்சரித்துள்ளார்.

Exit mobile version