இலங்கை

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு கவலையளிக்கும் செய்தி

Published

on

நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தினரையும், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களையும் இந்த புதிய வற் வரி திருத்ததம் கடுமையாக பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

வற் வரி திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புதிய வற் வரி திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும். இந்த வற் வரி திருத்தத்தின் மூலமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்வர்.

வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, போக்குவரத்து துறையில் விலை உயரக்கூடும்.

அதேசமயம், பேக்கரி பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.

இது இந்நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழை மக்களையும் அதிகம் பாதிக்கலாம்.

நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரிப்பை தாங்க முடியாத சூழலுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version