இலங்கை

கெஹேலியவின் உத்தியோகப்பூர்வ இல்லம் முன் மலர் வளையம்

Published

on

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெலவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன் மலர் வளையம் வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (01.1.2024) இடம்பெற்றுள்ளது.

எனினும் பொலிஸாரினால் குறித்த மலர் வளையம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வைத்தியர் சமல் சஞ்ஜீவ மற்றும் சமூக செயற்பாட்டாளர் சஞ்ஜய மாவத்த உள்ளிட்ட சிலர், கெஹேலிய ரம்புக்வெலவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு முன்னால் மலர் வளையமொன்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குறித்த மலர் வளையத்தை அங்கிருந்து அகற்றி உள்ளளர்.

அதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர் சமல் சஞ்சீவ,

கடந்த வருடத்தில் சுகாதாரத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெலவினால் முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் தொடர்பில் சாட்சியை முன்வைப்பதற்காக கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கி கொடுக்குமாறு உத்தியோகப்பூர்வ கடிதமொன்றை சமர்ப்பித்திருந்தோம்.

இந்நிலையில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

ஆனால், ஹெஹேலிய ரம்புக்வெல சட்டத்தரணிகளினூடாக அந்த விசாரணைகளில் இருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார் என அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Exit mobile version