இலங்கை
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வற் வரி திருத்தம்
புதிய வற் வரி திருத்தம் இன்று(01.01.2024) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வற் வரியை அதிகரிப்பதற்கான சட்டமூலம் கடந்த மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் 15 சதவீதமாக இருந்த வற் வரி இன்று முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்படுகின்றது.
இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டுவந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று முதல் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளது.
இந்தநிலையில், அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உணவு பொருட்களுக்கான விலை, போக்குவரத்து, தொலைபேசி சேவை உட்பட பல சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.