அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள பிரபல வர்த்தகர்

Published

on

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்சி பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அது தொடர்பான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பொது நிறுவனங்களை தனியார் மயமாக்காமை, வரி குறைப்பு போன்ற நிபந்தனைகள் பொது முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியே அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version