இலங்கை

வரி செலுத்த உரிமையுடையவர்கள் யார்.. நிதி அமைச்சு தீர்மானம்

Published

on

ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட நபரும் வரி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எந்தவொரு நபரும் தனது மாத வருமானம் 100,000 ரூபாவை தாண்டவில்லை என்றால், அவர்கள் வரி செலுத்துவதற்கு உரிமை இல்லை. வரியின் அடிப்படையில் நாங்கள் முடிவு செய்கிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புதிய வாகனப் பதிவு, புதிய வருமான அனுமதிப்பத்திரம், புதிய நடப்புக் கணக்கு திறப்பு மற்றும் சொத்துக் கொள்வனவுகளுக்கான வரிக் கோப்புகளைத் திறப்பதற்கான தீர்மானத்தை ஜனவரி முதலாம் திகதி முதல் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பெரும்பாலான மக்கள் இதுவரை வரிக் கோப்புகளை திறக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த மக்கள் தங்கள் வரிக் கோப்புகளைத் திறக்க ஒரு மாத கால அவகாசம் வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தப் பதிவு கடினம் அல்ல. உள்நாட்டு வருவாய்த் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் உள்நுழைந்து ஒன்லைன் முறை மூலம் தங்களைப் பதிவு செய்யலாம். கணக்கு தொடங்க நபரின் தேசிய அடையாள அட்டை மட்டுமே போதுமானது.

ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட நபரும் வரி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எந்தவொரு நபரும் தனது மாத வருமானம் 100,000 ரூபாவை தாண்டவில்லை என்றால், அவர்கள் வரி செலுத்துவதற்கு உரிமை இல்லை. வரியின் அடிப்படையில் நாங்கள் முடிவு செய்கிறோம்.

எவ்வாறாயினும், வரிக் கோப்பைத் திறந்து பதிவு செய்வது ஒரு நபருக்கு மிகவும் மதிப்புமிக்கது ஜனவரி மாதத்தின் பின்னர், புதிய வாகனங்களை கொள்வனவு செய்யும் போதும், புதிய வருமான அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதிலும், நடப்புக் கணக்கு ஆரம்பிக்கும் போதும், சொத்துக்களை கொள்வனவு செய்யும் போதும் வரிக் கோப்பு இலக்கம் கட்டாயமாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version