இலங்கை

முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிப்பு

Published

on

ஜனவரி மாதம் முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில், பெட்ரோலின் விலை அதிகரிக்குமாக இருந்தால் முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கக்கூடும் என அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம்(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் அரசாங்கம் பெட்ரோல் விலையை உயர்த்திய போது, ​​ முச்சக்கரவண்டி கட்டணங்களை உயர்த்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஆனால் வற் திருத்தத்துடன் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Exit mobile version