இலங்கை
கொழும்பில் நாளை ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்
கொழும்பு நகரில் நாளையதினம்(31) விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் உள்ள 5 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி இவ்வாறு விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.