இலங்கை

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1500 இற்கும் அதிகமானோர் கைது

Published

on

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1500 இற்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் விசேட போதைப்பொருள் நடவடிக்கையின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

590 கிராம் ஹெரோயின், 01 கிலோ 300 கிராம் ஐஸ், 06 கிலோ 330 கிராம் கஞ்சா மற்றும் ஏனைய போதை மாத்திரைகள் அங்கு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று நண்பகல் 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 1554 சந்தேக நபர்களில் 82 பேர் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான அறுபத்திரண்டு பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version