இலங்கை

அதிகரிக்கும் தொலைபேசிகளின் விலை

Published

on

ஜனவரி முதல் கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் துஷார ரத்னவீர தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு கையடக்க தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வற் வரி அதிகரிப்பின் காரணமாக, பேருந்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version