இலங்கை
உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம்
அடுத்த ஆண்டு முதல் உள்ளூராட்சி மன்றங்களின் கொடுப்பனவு நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அறிவித்துள்ளார்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் கட்டணச் செயற்பாடுகளை இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் (31ஆம் திகதி) கையடக்க தொலைபேசி செயலி ஊடாக இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை 45 இல் இருந்து 25 ஆக குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்ப்பதாக தொழிலாளர் போராட்ட மையம் தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை உடனடியாக திருப்பிப் பெறுமாறு நிதியமைச்சிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுக்கப்படும் என மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.