இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை

Published

on

சீனாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிப் பொருட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த இறைச்சிக் களஞ்சியத்தை அழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கால்நடை வளர்ப்புத் தொழில் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அதன் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் நிலைமை உறுதிப்படுத்தப்பட்ட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி தொகையை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சுங்கம் தெரிவித்திருந்தது.

பன்றி இறைச்சி, சொசேஜஸ், மற்றும் வாத்து இறைச்சி என்பன கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியின்றி சீனாவில் இருந்து இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

எனினும், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த இறைச்சி தொகை, சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொதலாவல தெரிவித்துள்ளார்.

Exit mobile version