இலங்கை

சிறுவர்கள் மத்தியில் பரவும் நோய் தொற்றுகள்

Published

on

சமகாலத்தில் சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் தொற்றுகள் அதிகளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சிறுவர்கள் மத்தியில் நோய் பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவது அவசியம் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவரின் மரணம் பதிவாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தை 60 வயதான பெண் ஒருவரே உயரிழந்துள்ளார்.

ஒரு வார காலப்பகுதியில் பதிவான இரண்டாவது கொவிட் தொற்று மரணம் இதுவாகும்.

Exit mobile version