இலங்கை

நாட்டில் கேக் விற்பனையில் வீழ்ச்சி

Published

on

நத்தார் பண்டிகைக் காலத்தில் நாட்டில் கேக் விற்பனை 75 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை பண்டிகைக் காலத்தில் பேக்கரி உற்பத்திகளின் விற்பனையிலும் கடும் சரிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது கேக் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்நிலையில் முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதில் உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் முட்டை வகைகள் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கவில்லை எனவும், 55 ரூபா கொடுத்து முட்டை கொள்வனவு செய்து கேக் வகைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாது என ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Exit mobile version