இலங்கை

வவுனியாவில் பொலிஸார் விசேட சோதனை

Published

on

வவுனியாவில் பொலிஸார் விசேட சோதனை

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (26.12.2023) விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்தவும், போதைப் பாவனையை தடுக்கும் வகையிலும் வவுனியா போக்குவரத்து பொலிஸார் இந்த திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது, 10 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், ஒரு சாரதிக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்ககைகளின் ஒரு பகுதியாக, வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய போக்குவரத்து பொலிஸாரினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் ஒரு திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பியமை, முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம், தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக சாரதிகளுக்கு தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version