இலங்கை
குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை
குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை
JN1 எனப்படும் கோவிட் மாறுபாடுடன் குழந்தைகளிடையே தற்போது பல சுவாச நோய்கள் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே ஆரோக்கியமான பழக்கங்களை மீண்டும் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
JN1 வகை கோவிட் மாறுபாடு இலங்கைக்கும் வரக்கூடும் என்றும், இந்த நாட்களில் இருமல் அல்லது சளி இருந்தால், முகக்கவசங்களை அணியுமாறும் தெரிவித்துள்ளார்.
“இதேவேளை, இன்ஃப்ளூவன்ஸா நோயும் பரவிவரும் நிலையில், புதிய கோவிட் வழக்குகள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
பண்டிகை காலம் என்பதனால்,பயணம் செய்யும் போது அனைவரும் கவனமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளார்.
மேலும், குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை கோவிட் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை எனவும், டெங்கு நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வயிற்றுப்போக்கு என்பது விடுமுறை நாட்களில் தினமும் காணப்படும் ஒரு நோய் எனவும், குழந்தைகளுக்கு சுத்தமான உணவு வகைகளை கொடுக்குமாறும் தீபால் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.