இலங்கை

ஆறு மாதங்களில் பாதாள உலக குழு முடிவுக்கு கொண்டு வரப்படும்

Published

on

ஆறு மாதங்களில் பாதாள உலக குழு முடிவுக்கு கொண்டு வரப்படும்

எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் பாதாள உலகக் குழு செயற்பாடுகளும் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த நாட்டையும் ஆக்கிரமித்துள்ள போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்கான பின்னணி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி யுக்திய என்னும் பெயரில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் தொடரும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக இணைந்து முன்னெடுத்த யுக்திய நடவடிக்கையின் ஊடாக இதுவரையில் 6583 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version