இலங்கை

இலங்கையில் விவசாயத்தில் புரட்சி செய்த விவசாயி

Published

on

இலங்கையில் விவசாயத்தில் புரட்சி செய்த விவசாயி

அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் அறுவடை செய்து சுமார் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்றுள்ளார்.

இவர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மிளகாய்ச் செய்கையின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரை ஏக்கரில் மிளகாய்ச் செய்கையை ஆரம்பித்துள்ளார்.

முன்னதாக மிளகாய்ச் செய்கையில் அதிக அறுவடை வருமானம் பெற்ற இரண்டு விவசாயிகள் அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியிருந்ததுடன் அவர்கள் 50 முதல் 60 இலட்சம் வருமானத்தை பெற்றனர்.

ஆனால் மேற்குறிப்பிடப்பட்ட புளியங்குளத்தை சேர்ந்த பந்துல காமி என்பவர் 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய மிளகாயின் சந்தை விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஜனவரி மாதம் 14 வரை மிளகாய் அறுவடை செய்ய முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version