அரசியல்

பிரச்சாரங்களை அடுத்த மாதம் ஆரம்பிக்கும் ரணில்

Published

on

பிரச்சாரங்களை அடுத்த மாதம் ஆரம்பிக்கும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரம் ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தேர்தல் பிரச்சார முகாமையாளராக நியமிக்கப்படவுள்ளார்.

அதற்கு முன்னதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பதவியில் இருந்து சாகல ரத்நாயக்க விலகவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் அவர் தேசிய பாதுகாப்புக்கான தலைமை ஆலோசகர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க, பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா, ஜானக ரத்நாயக்க மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இதுவரையில் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version