இலங்கை

அம்பலாங்கொடை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Published

on

அம்பலாங்கொடை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை நகரில் இன்று (17.12.2023 ) அதிகாலை இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான லொறி ஒன்றின் சாரதியான மெட்டியகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த சாரதி பயணித்த லொறியில் சென்ற இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version