இலங்கை

பல்கலைக்கழக மாணவர்களை சமூக சேவையில் இணைக்க திட்டம்

Published

on

பல்கலைக்கழக மாணவர்களை சமூக சேவையில் இணைக்க திட்டம்

பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழகங்களில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழ்நிலையை உருவாக்க சகல வழிகளிலும் முயற்சிக்கப்படும்.

எதிர்வரும் ஆண்டில் 41000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

இந்த மாணவர்கள் பல்கலைக்கழங்களில் கற்கை நெறிகளை ஆரம்பிக்க முன்னதாக அவர்கள் தெரிவு செய்யும் பாடத்திற்கு ஏற்ற வகையில் சமூக சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நான்கு மாதங்கள் மாணவர்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டுமெனவும், பல்கலைக்கழக கட்டமைப்பினை மேம்படுத்தும் நோக்கில் துணைவேந்தர்களுக்கு மேலதிகமாக பிரதி துணைவேந்தர்கள் நியமிப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version