இலங்கை

சுவிற்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்படும் இலங்கையர்கள்!

Published

on

சுவிற்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்படும் இலங்கையர்கள்!

கடந்த மாதம் மாத்திரம் சுவிட்சர்லாந்து அதிகாரிகள், இரண்டு ஈழத்தமிழ் குடும்பங்களை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

இந்தநிலையில் நாடுகடத்தலின் போது அதிகாரிகளின் தாக்குதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவர் எங்கிஸ்டீனில் உள்ள புகலிட முகாமில் இருந்து பொலிஸாரினால் அறிவிக்கப்படாமல் அழைத்துச் செல்லப்பட்டு, இலங்கைக்கு விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.

சுவிஸ் தடுப்புக்காவலில் குறைந்தது மூன்று இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நகுலேஸ்வரன் விஜயன் சுவிஸ் காவலில் வைத்து தன்னுயிரைப் போக்கிக்கொண்டார்;. 2022 பெப்;ரவரி 15 அன்று, நேசுராசா ராசநாயகம் சுவிட்சர்லாந்தின் கம்பெலன் முகாமில் மரணமான போதும் மரணத்துக்கான காரணம் கூறப்படவில்லை.

குடும்பத்தினரின் கோரிக்கையையும் மீறி அவரது உடல் சுவிட்சர்லாந்தில் தகனம் செய்யப்பட்டது.

2018 ஆம் ஆண்டில் 28 வயதான தமிழ் பெண் மரணமானார்; அதே ஆண்டு, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்படடதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Exit mobile version