இலங்கை

சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Published

on

சீரற்ற காலநிலை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நீர் நிலைகளில் நீராடச் செல்லும் பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி நாட்டில் நிலவி வரும் மழையுடனான காலநிலையை கருத்திற் கொண்டு செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனப் பகுதி மற்றும் கன்னெலிய பகுதி நீர் வீழ்ச்சிகள், நீர் நிலைகள் போன்றவற்றில் நீராடும் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீர் வீழ்ச்சிகளைக் கொண்ட பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருவதனால் நீர் மட்டம் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே நீர் நிலைகளில் குறிப்பாக நீர் வீழ்ச்சிகளில் நீராடுவது மற்றும் நீர் நிலைகளில் இறங்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, கன்னெலிய மற்றும் சிங்கராஜ வன நீர் வீழ்ச்சிகளை பார்வையிட பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version