இலங்கை

ராஜபக்சவினர் பதுக்கியுள்ள நிதியை மீட்குமாறு சந்திரிக்கா ஆலோசனை

Published

on

ராஜபக்சவினர் பதுக்கியுள்ள நிதியை மீட்குமாறு சந்திரிக்கா ஆலோசனை

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் திருடிய பணத்தை திரும்ப பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன், ராஜபக்ச குடும்பத்திடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வரிகளை அதிகரிப்பதற்கு பதிலாக இழந்த நிதியை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது.

ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version