இலங்கை

விசேட அதிரடி படையினர் தொடர்பில் நடவடிக்கை

Published

on

விசேட அதிரடி படையினர் தொடர்பில் நடவடிக்கை

அதிவேக வீதி அமைப்பில் கடமையில் ஈடுபடும் விசேட அதிரடிப்படையினர் அனைவரையும் அந்த கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் ஆண்டில் 5,000 புதிய பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிவேக வீதி அமைப்பில் தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் பணிகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்கின்றனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை.

இந்நிலையில் அந்த படையினர் அனைவரையும் அதிவேக வீதி கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 11 மாதங்களில் 164 சந்தர்ப்பங்களில் மாத்திரமே இவ்வாறான சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version