இலங்கை

தென்னிலங்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தவரை காப்பாற்றிய இளைஞர்கள்

Published

on

தென்னிலங்கையில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்தவரை காப்பாற்றிய இளைஞர்கள்

களுத்துறை, வஸ்கடுவ இளைஞர்கள் குழுவொன்று லொறியில் மோதியதன் பின்னர் வேனில் சிக்கிய நபரை மீட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.

30 நிமிட நடவடிக்கையில் இரும்புச் சங்கிலிகள் மற்றும் பல பொருட்களை பயன்படுத்தி பாரிய முயற்சியின் பின்னர் குறித்த இளைஞனின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறிய லொறி, வஸ்கடுவ பகுதியில் வைத்து அதிவேகமாக பின்னால் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். பெரும் சத்தத்துடன் இந்த விபத்து நடந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் குழு ஒன்று உடனடியாக அங்கு வந்து சிக்கிய நபரின் உயிரை காப்பாற்ற போராடியுள்ளனர்.

அதற்கமைய, 30 நிமிட நடவடிக்கையில் அந்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில், 1990 அம்பியுலன்ஸ் சேவையும் அந்தப் பகுதியை வந்தடைந்த நிலையில், அவர்களின் அறிவுறுத்தல்களின்படி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.

அதற்குள் இளைஞர்கள் காயமடைந்த நபரை மீட்டு களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

Exit mobile version