இலங்கை

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமை

Published

on

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமை

உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது (10.12.20232) வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

நீதியான சர்வதேச பொறிமுறை விசாரணை தேவை, உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம் எனவும் எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் நீதி இல்லை எனவும் இதனால் எதற்கு இந்த மனித உரிமைகள் தினம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உறவினர்கள் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரித்துள்ளனர்.

அத்துடன் தனது மகனை விடுவிக்க கடற்படை அதிகாரி 15 இலட்சம் ரூபா கப்பம் கேட்டதுடன் இது தொடர்பான பற்று சீட்டினை கிழித்துவிட்டனர் என தாய் ஒருவர் இதன் போது கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் தனது கருத்துகளை எழுதிய பல பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version