இலங்கை

பலவீனமடையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

Published

on

பலவீனமடையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சின் செலவினக் குழுவின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த கூட்டணியில் இருந்து ஐந்து எம்.பி.க்கள் மட்டுமே எதிர்க்கட்சியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பினால் வடக்கில் எதனையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version