இலங்கை

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பரிசில் தொகை

Published

on

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பரிசில் தொகை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது வாக்குறுதியளிக்கப்பட்ட 50,000 டொலர்கள் விருது பணத்தை சிறிலங்கா கிரிக்கெட் சபை ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானம் மற்றும் கண்டி பல்லேகல மைதானம் ஆகியவற்றின் ஊழியர்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

இதன்படி, 2023 ஆசியக் கிண்ணத்தின் போது பணிபுரிந்த கொழும்பு ஆர் பிரேமதாச மைதான ஊழியர்களில் 138 பேரின் (நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள்) முயற்சிகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டதுடன், கண்டி மைதான ஊழியர்களில் 115 உறுப்பினர்கள் வெகுமதியை எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்கவுள்ளடாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு மைதானங்களின் பணியாளர்களும் போட்டியின் போது பயிற்சி வசதிகள், வெளியக ஆடுகளங்கள், மைதானத்தை மூடுதல், வெளிக்கொணர்தல் மற்றும் தொடர்புடைய சேவைகளை உறுதிசெய்து, மோசமான வானிலை இருந்தபோதிலும், போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான சிறப்பான சேவையை செய்துள்ளனர்.

இந்த வெகுமதிகள் ஆசிய கிரிக்கெட் சபை மற்றும் சிறிலங்கா கிரிக்கட் ஆகியவற்றால் கூட்டாக வழங்கியுள்ளதோடு வெகுமதிகளில் ஒவ்வொரு நிறுவனமும் தலா 25,000 டொலர்களை பங்களிப்பான வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version