இலங்கை

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி!

Published

on

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி!

புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி இடம்பெறுவதாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கிளை பொறுப்பாளர் ரகு தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் செயலுக்கு பின்னர் சொல்லை வைத்தவர். இருப்பினும் தற்போது எமது புலம்பெயர் தேசங்களில் தலைவரின் பெயரினாலும், அவரது குடும்பத்தின் பெயராலும் முன்னெடுக்கப்படும் அனைத்தும் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

எனவே புலம்பெயர் மக்கள் உண்மையான நிலவரங்களை அறிந்து சரியான முடிவினை எடுக்க வேண்டும்.

மேலும், எமது தேசிய போராட்டத்தையும், விடுதலைப்புலிகளின் தலைவரையும் அவரது குடும்பத்தினரையும், போராளிகளின் தியாகத்தையும், மக்களின் அர்ப்பணிப்பையும் சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர் எனவும், அதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் விளிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

தாயகம் கோரிய உரிமைப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version