இலங்கை
பொது மேடையில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய பிரமுகர்
பொது மேடையில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய பிரமுகர்
பொது நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் செய்தது சரியா என சனச வங்கியின் ஸ்தாபகர் கலாநிதி பீ.ஏ.கிரிவென்தெனிய கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற சனச தேசிய சம்மேளனத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் முன்னிலையிலேயே அரசியல்வாதிகளை அவர் கடுமையாக சாடியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீங்கள் பொதுமக்களிடம் கேட்ட அனைத்துமே மக்கள் வழங்கி இருக்கின்றார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கேட்டீர்கள், ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை கேட்டீர்கள், அரசாங்கத்திற்கு ஆறில் ஐந்து பலம் வழங்கப்பட்டது.
எனினும் இறுதியில் மக்களுக்கு என்ன கிடைக்கப்பெற்றது. உங்களில் இருந்து மாற்றம் ஆரம்பிக்கப்பட வேண்டும். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் அகங்காரமாக செயல்படுகின்றனர்.
இது என்னுடைய கருத்து அல்ல. ஏன் அவர்களால் எளிமையாக நடந்து கொள்ள முடியாது? இந்த யாசக மனநிலையில் இருந்து மாற்றம் பெற வேண்டும். அரசியல்வாதிகள் மாற்றம் பெற்றாலே நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.