இலங்கை

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்து அமைச்சர் தகவல்

Published

on

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்து அமைச்சர் தகவல்

உத்தேச வற் வரி அதிகரிப்பு குறித்த இறுதி தீர்மானம் இந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உத்தேச 18% பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு பயனுள்ளதாக இருக்காது.

எவ்வாறாயினும் மண்ணெண்ணெய் மற்றும் டீசலுக்கு வற் வரியில் இருந்து விலக்கு அளிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும்.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை உபகுழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதுடன் அடுத்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் செயற்பாட்டுக்கு வந்தவுடன் இலங்கை பெற்றோ -இரசாயனங்கள் மற்றும் பெற்றோலிய பொருட்கள் ஏற்றுமதிக்கு செல்லும்.

மேலும், இலங்கையில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் ,பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், பிரதேச மற்றும் மாவட்ட செயலக அலுவலகங்கள் என 27,000 இடங்களுக்கு ஒரு வருடத்திற்குள் சோலார் பேனல்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version