அரசியல்

மகிந்தவை மகிழ்ச்சிப்படுத்த நாமலின் நடவடிக்கை

Published

on

மகிந்தவை மகிழ்ச்சிப்படுத்த நாமலின் நடவடிக்கை

மாலைதீவு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொலைபேசி ஊடாக உரையாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலைத்தீவுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த ஜனாதிபதி ரணில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

வாழ்த்துகள் முடிந்ததும் நாமல் ராஜபக்சவிடமிருந்து ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சர்ப்ரைஸ் விருந்து ஒன்றை தயார் செய்துள்ளதாகவும் அதில் பங்கேற்க முடிந்தால் தந்தை மகிழ்ச்சி அடைவார் என நாமல் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில், தனது பாதையை மாற்றிக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் விஜேராம இல்லத்திற்கு சென்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் வீட்டுக்குச் சென்ற போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குழுவினரும் அங்கு கூடியிருந்தனர்.

அவர்கள் அனைவருடனும் பிறந்தநாள் வாழ்த்துக்களில் கலந்து கொண்ட ரணில், மாலைதீவில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் நிகழ்வுக்கு வந்திருப்பதாகக் கூறி அங்கிருந்து சிறிது நேரத்திலேயே வெளியேறியுள்ளார்.

Exit mobile version